சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீட்டிம் வெளியில் தூங்கிக் கொண் ருந்த திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளையூர் கிராமம் மேற்கு காடு பகுதியைச் சேர்ந்த 56 வயது மாணிக்கம், திமுக சேலம் கிழக்கு மாவட்டப் பிரதிநிதியாக இருந்து வந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே மாணிக்கம் கட்டிலில் படுத்து உறங்கி உள்ளனர். அவரது இரண்டாவது மனைவி இந்திரா வீட்டுக்குள் தூங்கி உள்ளனர். முதல் மனைவி மகன் உதய பிரகாஷ் இன்னொரு வீட்டில் தூங்கிக் கொண்டே இருந்தனர்.
இன்று அதிகாலை வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மாணிக்கம் மர்மமான முறையில் இரத்த வெள்ளத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவலின் பேரில் வீரகனூர் போலீசார் நிகழ்விடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணிக்கத்துக்கு விவசாய நிலம் தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதனால் அதில் யாராவது மாணிக்கத்தை படுகொலை செய்துள்ளார்களா என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் தடை அறிவியல் துறையினரும், போல்ட் என்ற மோப்ப நாய் உதவியுடன் போலீசாரும் தடயங்களை சேகரித்தனர்.
