Close Menu
    What's Hot

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரையை கடந்தது ‘சென்யார்’ புயல்… தமிழகத்திற்கு பாதிப்பில்லை
    தமிழ்நாடு

    கரையை கடந்தது ‘சென்யார்’ புயல்… தமிழகத்திற்கு பாதிப்பில்லை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025Updated:November 26, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    met
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய சென்யார் புயல், இந்தோனேசியாவில் கரையை கடந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்ககடலில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடதமிழகம் – புதுச்சேரி கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    அதேபோல, மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதேபகுதிகளில் நிலவியது. அதன் பிறகு, மேற்கு திசையில் நகர்ந்து, இன்று “சென்யார்” புயலாக மேலும் வலுப்பெற்று, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு இந்தோனேசியா பகுதிகளில் நிலவியது. பிறகு, இன்று காலை 7.30 – 8.30 மணியளவில் இந்தோனேசியாவில் கரையை கடந்தது.

    இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளில் பலத்த தரை காற்று மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    அந்த வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நவ.28: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும்; ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நவ.29: திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.

    அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிககனமழைக்கும்; புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

    நவ.30: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு

    இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    நவ.26 – 27: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    நவ.28 – 29: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    வங்கக்கடல் பகுதிகள்

    நவ.26 – 27: தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசும். அதேபோல, வடக்கு அந்தமான் மற்றும் ஏனைய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    நவ.28: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி கோரிக்கை
    Next Article ஜெய்லர் 2 ஷூட்டிங்கில் இணைந்த பிரபல வில்லன் நடிகர் ; கடைசி நேரத்தில் ட்விஸ்ட் !!!
    Editor TN Talks

    Related Posts

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    July 17, 2026

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    July 17, 2026

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    6வது நாளாக தீவிரமடையும் அமெரிக்க தாக்குதல்.. ஈரான் மீது இடைவிடாத குண்டுவீச்சு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.