கரூர் சம்பவத்திற்கு பின் பல நிபந்தனை, கட்டுப்பாடுகளுடன் முக்கியமாக காவல்துறை அனுமதியுடன் விஜய் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன்படி, இன்று சேலம் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில். கூட்டத்தில் பங்கேற்றிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக சூரஜ் (37) என்பவர் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஏற்கனவே சூரஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ், வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து இன்றைய கூட்டத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
