கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சமூக நீதி மாணவிகள் விடுதியில், கோவை அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிக்குச் செல்லும்போது பொதுப் பேருந்துகளில் நிலவும் கடும் கூட்ட நெரிசலால் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து விடுதியில் ஆய்வு மேற்கொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்கு குமாரிடம் மாணவிகள் தங்களுக்குத் தனிப் பேருந்து வசதி கோரி விண்ணப்பித்தனர்.

மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற அமைச்சர், கவுண்டம்பாளையம் விடுதியிலிருந்து காலை நேரத்தில் அரசு கலைக் கல்லூரிக்குச் செல்ல பிரத்யேகச் சிறப்புப் பேருந்து இயக்கப்படுவதைத் துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் ஏறி மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அவர், அவர்களின் மகிழ்ச்சியைக் பகிர்ந்து கொண்டார். தங்களுக்குத் தனிப் பேருந்து வசதி செய்து தந்த அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version