கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 100 மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கும் விழா சென்னை  திருவொற்றியூர் தேரடியில் நடைபெற்றது.

புஷ்பம் பழனிசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத்தின் மாநில பொருளாளர் பெ.சண்முகவேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன்ஹாசன், பொருளாளர் கி.மணிவாசகம் மற்றும் துணை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவில் 100 மாணவ, மாணவிகளுக்கு உதவிகளை வழங்கினர்.

திருவொற்றியூர் பகுதி பள்ளிகளில் பயிலும் 100 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்,

25 ஏழை எளிய பெண்களுக்கு தலா 5 கிலோ அரிசி,  

சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் மூன்று பேருக்கு நிழற்குடை, 

10ஆம் வகுப்பு தேர்வில் அதிகமதிப்பெண்கள் எடுத்த 5 பேருக்கு சிறப்பு பரிசுகள் மட்டுமல்லாமல் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version