Close Menu
    What's Hot

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விளிம்பு நிலையில் இருப்போருக்கு சிறப்பு நிதி ரூ.2,000 வரவு வைப்பு!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    விளிம்பு நிலையில் இருப்போருக்கு சிறப்பு நிதி ரூ.2,000 வரவு வைப்பு!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    Editor web3By Editor web3March 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin story 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

    நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!

    இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

    இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன்…

    தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்”! என்று பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவளைகுடா போர் பதற்றம்!. 5 நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு!
    Next Article நாங்குநேரியில் இரட்டைக்கொலை… பயத்தோடு வாழும் பட்டியலின மக்கள்?
    Editor web3
    • Website

    Related Posts

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    June 11, 2026

    தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

    June 11, 2026

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.