புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் பெயரை சேர்க்க விண்ணப்பிக்க வசதியாக, சென்னையில் நாளையும் தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.16 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக, சென்னை மாவட்டத்தில் மொத்தமாக 40 லட்சத்து 4 ஆயிரத்து 694 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி பகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத மற்றும் திருத்தம் செய்ய வேண்டியவர்களுக்கு இன்று (டிசம்-20) மற்றும் நாளை (டிசம்-21) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

தகுதியுள்ள வாக்காளர்கள், விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும், தவறான தகவல்களை திருத்தவும், அடுத்த இரு வாரங்களுக்கு இந்த முகாம்களில் கலந்து கொள்ளலாம். சிறப்பு முகாம்களில், புதிய வாக்காளர் பதிவு அல்லது பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, இறப்பு அல்லது இடமாற்றம் காரணமாக பெயரை நீக்குவதற்கு படிவம் 7, விவரங்களில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்களுக்கு படிவம் 8 பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

முகாம்களுக்கு செல்ல முடியாதவர்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் voters.eci.gov.in அல்லது வாக்காளர் உதவி செயலி (Voter Helpline App) மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.வரைவு வாக்காளர் பட்டியலில் புகார்கள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் காலம் டிசம்பர் 19, 2025 முதல் 30 நாட்கள் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version