அந்தக் காலத்தில் எந்த ஊருக்குச் சென்றாலும் நம்முடைய கொடி பறக்கிறதா என்று என் கண்கள் தேடும். தமிழ்நாட்டில் அத்தனை ஊரிலும், அத்தனை நகரத்திலும் அதிகக் கொடி ஏற்றிய கை, இந்த ஸ்டாலினின் கை.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா – தமிழினத் தலைவர் கலைஞர் – திராவிட முன்னேற்றக் கழகம் – கருப்பு சிவப்புக் கொடி – உதயசூரியன் சின்னம் – அண்ணா அறிவாலயம், இவைதான் நம் உயிர்! தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம்! அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது!
ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு! அடுத்த ஆண்டு இந்த நேரத்தில்என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!”.இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கவேண்டும்! அதற்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது!
நான் மமதையில்பேசுகிறவன் அல்ல. “கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை” என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல! எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்! சொல்லைவிட செயலே பெரிது! வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல்இருக்கும் நம்பிக்கையில்தான்!
பொதுக்குழுவுக்கு வராத, இரவு பகல் பார்க்காமல் – வெயில் மழை பார்க்காமல் – தனக்கு என்ன பயன் என்று பார்க்காம உழைக்கும்,கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் நம்பித்தான் சொல்கிறேன். கழகம் இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம்! உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல் கழகமும் இல்லை; நானும் இல்லை! என்னைத் தலைவராக உருவாக்கியது நீங்கள்! என்னை முதலமைச்சராக்கி உயர்வைத் தந்தது, நீங்களும் – மக்களும்! உலகத்தில் எந்தக் கட்சிக்கும், இப்படிப்பட்ட உறுதிமிக்க உழைப்பாளிகள் தொண்டர்களாக கிடைத்திருக்க மாட்டார்கள்!
சூரியன் நிரந்தரமானது. அதேபோன்றுகழகமும் நிரந்தரமானது. கழகம் எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று கழக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்கவேண்டும்.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல்மறைக்க – திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள்.
கடந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம்.
நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி! 2017-ஆம் ஆண்டு முரசொலி பவள விழாவில் நம்முடைய பயணம் தொடங்கியது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தல்களுக்கு தொடர்ந்ததாக வரலாறு இல்லை. நம்முடைய வெற்றிக் கூட்டணி வலுவாக தொடர்கிறது என்றால் அதுக்குக் காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்து செயல்படுவதுதான். நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் பழனிசாமி. என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு! என்ன… காலில் மட்டும்தான் விழவில்லை! அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை!
ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க! அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்! நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான்.
‘எல்லாருக்கும் எல்லாம்’ என்று அனைத்துதரப்பு மக்களுக்கும் பார்த்து பார்த்து நாம்திட்டங்களை செய்திருக்கிறோம். நம்முடையதிட்டங்களால், தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ இரண்டரைக் கோடி பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்கள்.
கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால்அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்.
தொண்டர்களின்நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம். என் இயக்கம் – என் கட்சி – என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம்முடையதொண்டர்கள். “நானும் – என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது” என்ற எண்ணம்தான், இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருக்க அடிப்படை காரணம்! இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும். செயல்பாடுகள் வேகமாக இருக்கும். வெற்றி உறுதி செய்யப்படும்.
ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடையபணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம். தலைவர் கலைஞராக இருந்தால், கவிதை எழுதுவார்; கதைகள் எழுதுவார்; சினிமா வசனம் எழுதுவார்; இலக்கிய மேடைகளில் கலக்குவார். எனக்குத் தெரிந்தது, அரசியல் மட்டும்தான். நான் அரசியல் – அரசியல், உழைப்பு –உழைப்பு என்று வளர்ந்தவன். டிவி பார்த்தால்கூட, நியூஸ் சேனல்தான் பார்ப்பேன். சோசியல் மீடியாவை பார்த்தாலும், அரசியல் செய்திகள், பேட்டிகளைத்தான் பார்ப்பேன்.
திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! பொதுக்குழுவில் தொடங்கியிருக்கும்இந்தப் பயணத்த – சட்டமன்றத் தேர்தல் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும்! அதில் மீண்டும் ஒன்றாகசந்திப்போம்