சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனையை நடத்துகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10:30 மணியளவில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியதுடன், கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினே தோல்வியைத் தழுவியது கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தோல்விக்கான காரணங்கள் மற்றும் கள நிலவரம் குறித்து மாவட்ட வாரியாக அவர் கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் தேர்தல் பணி மற்றும் சில மாவட்டங்களில் நிலவிய உட்கட்சிப் பூசல்கள் குறித்தும் தேர்தல் தோல்வி, எதிர்க்கட்சியாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம். இதுமட்டுமல்லாமல் தேர்தலில் சரியாக வேலை பார்க்காத நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தேர்தலுக்கு முன்பே ஸ்டாலின் எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தோல்விக்குக் காரணமான மற்றும் மெத்தனமாகச் செயல்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version