21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் பேருந்து நிலையங்கள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கவோ வழங்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளருக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
