ஊட்டியில் நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 127 வது மலர் கண்காட்சியை திறந்து வைக்கிறார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மலர்கண்காட்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் தற்போது வெயில் கடுமையாக சுட்டெரிப்பதாலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.
இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நாளை தொடங்கி, 25 ஆம் தேதி வரையிலும் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக ஊட்டி பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நிலையில் நாளை மலர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட இருக்கிறார்.