பாரதிய ஜனதாவினருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது முருகன் மாநாட்டை நடத்துகிறோம், திமுக அரசுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது பிறகு ஏன் அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தினார்கள் என்பதில் தான் சந்தேகமாக இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வரவுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்காக மதுரை சென்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அவர்களின் கேள்விகளுக்கு தமிழிசை அளித்த பதில்கள் வருமாறு….

நாங்கள் பயபக்தியோடு முருகன் மாநாடு நடத்த இருக்கிறோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பயத்துடன் முருகன் மாநாட்டை பார்க்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், ஆன்மிகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

நாங்கள் எப்போதுமே முருகனை வணங்குபவர்கள்தான். ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்கள் முருகன் மாநாடு நடத்தியதுதான் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே திருமாவளவன் கவலைப்பட வேண்டாம். எங்களிடம் இருப்பது மதவாதம் கிடையாது, மனிதத்துவம்.

2026-ல் எங்களுக்கு வெற்றி வரும், அதன்பிறகு அவர்கள் ஓய்வு எடுக்கலாம். முருகன் மாநாட்டை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நடத்ததலாம். தமிழ்நாட்டில் முதலில் நடத்திவிட்டு பின்னர் மற்ற மாநிலங்களில் நடத்துவோம்.”

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் வரும் 22-ந்தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version