பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக இணையவுள்ள புதிய திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படம் ஒரு டைம் டிராவல் (காலப்பயணம்) கதை தொடர்பான எனக் கூறப்படுகிறது. மிகவும் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகவுள்ள இந்தப் படத்தில், இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வெங்கட் பிரபுவின் தனித்துவமான படைப்பியல், சிவகார்த்திகேயனின்நடிப்பில் உருவாகும் இந்த டைம் டிராவல் படம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிசோதனையை கொண்டு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.