குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

இந்திய நாட்டின் 77-வது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி பங்குபெறும். அந்தவகையில் 2026ம் ஆண்டிற்கான குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறும் வகையில் தமிழக அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது, 2024ல் குடைஓலை முறை குறித்து அலங்கார ஊர்தி குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றது. ஆனால், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது சர்ச்சையான நிலையில் இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version