2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ள நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அதனடிப்படையில், திமுக – அதிமுக என இரு கட்சிகளிமும் ஒரே நேரத்தில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திவருதாக கூறப்படுகிறது.
இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வருகின்ற ஜனவரி 9 – 2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூரின் பாசார் கிராமத்தில் நடக்க இருக்கின்ற நமது மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தரவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார். இதையடுத்து, கூட்டணி தொடர்பான முடிவும் அந்த மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், பிரேமலதாவிடம் தேமுதிக-விற்கு ராஜ்யசபா சீட் தர அதிமுக – திமுக இருக்கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியினர் அதிக இடம் தருகிறார்களோ? அவர்களுடனே கூட்டணி என்று தேமுதிக முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என கூட்டணி பட்டியல் பெரியது. ஆனால், ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக மட்டுமே தற்போது வரை உள்ளது. எனவே, அதிமுக-வே அவர்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தேமுதிகவை அதிமுக கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
