Close Menu
    What's Hot

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வந்தது அறிவிப்பு!. பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000 வழங்கப்படும்!. முதலமைச்சர் ஸ்டாலின்!.
    தமிழ்நாடு

    வந்தது அறிவிப்பு!. பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000 வழங்கப்படும்!. முதலமைச்சர் ஸ்டாலின்!.

    Editor web3By Editor web3January 4, 2026Updated:January 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும், அடுத்தடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பச்சரி மற்றும் கரும்பு உள்ளிட்ட தொகுப்புடன், ரூ.1000 ரொக்கமும் வழங்கினர். ஆனால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகுப்பில் ரொக்கம் இடம்பெறாதது ஏமாற்றமாக அமைந்தது. . இந்நிலையில் தான் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை நிச்சயம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கமும் இடம்பெறும் என்றும் ரொக்கமும் வழங்கப்படும் என்றும் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

    இந்தநிலையில், பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.

    பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

    மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட . மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேள்விக்குறியாகும் முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை?. நியூசி.க்கு எதிரான தொடரில் இடமில்லை!. ரசிகர்கள் கொந்தளிப்பு!
    Next Article திமுகவின் ஊழல், பொய் வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துவிட்டனர்!. அமித் ஷா தாக்கு!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    July 5, 2026

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    July 5, 2026

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    தெலுங்கானா : நகைக்காக கிணற்றில் தள்ளி விடப்பட்ட பெண்..! 21 மணி நேர போராட்டம்..! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    திருப்பூர் : பேஸ்புக் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.