பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரும், அதன் முதல் தலைவருமான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தையொட்டி பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறவினர்கள் தான் ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்ற அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், நிர்மல் குமார் சட்டப்படித்து இருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி உத்தரவைக்கூட நிறைவேற்ற முடியாது என சொன்னால் அவர் அமைச்சராக நீட்டிக்க தகுதியில்லாதவர்.
தமிழக வெற்றி கழகம் போன்ற சாதாரண கட்சி இல்ல பா.ஜ.க. இனி வரக்கூடிய காலத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் பா.ஜ.க. தான் இந்தியாவை ஆளப்போகிறது. சட்டமன்றத்தில் அதிகமாக பேசுபவர் முதல்வர்தான். சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இதுவரை முதல்வர் பதிலளிக்கவில்லை. நிர்மல் குமார் ஒரு காலத்தில் பா.ஜ.க.வில் அடுத்து அ.தி.மு.க.வில் பிறகு தமிழக வெற்றிக்கழகம் அடுத்து எங்கு போக இருக்கிறார் என்பது தெரியவில்லை.
நிர்மல் குமார் நீங்கள் சட்டம் படித்தவர் நானே. முதலமைச்சராக பதவி ஏற்க எங்களை அனுமதி இல்லை என்று யாருக்கெல்லாம் நீங்கள் போன் செய்தீர்கள் தெரியுமா அப்போது பாஜக இனித்தது. பழைய மின்சார துறை அமைச்சர் மின்தட்டுபாடுக்கு அணில் வந்தது என சொன்னார் இப்போது இருக்கக்கூடிய அமைச்சர் குரங்கு வந்தது என சொல்கிறார். முதல்வர் செய்கை இன்னும் சினிமாவில் நடிப்பது போன்று சட்டமன்றத்தில் இருக்கிறார். இதுபோன்று முன்பு செய்தவர்களின் நிலை என்னானது என்பது நமக்கு தெரியும். முதல்வர் தனது தகுதியை அறிந்து அதற்கான சட்டமன்றத்தில் மறபோடு நடக்க வேண்டும்” என்றார்.
