Close Menu
    What's Hot

    BREAKING| தமிழகத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!

    பாஜகவிற்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்!. திருமாவளவன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகமே அதிர்ச்சி!. பட்டப் பகலில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!. நெல்லை பஸ் ஸ்டாண்டில் பகீர்!
    தமிழ்நாடு

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப் பகலில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!. நெல்லை பஸ் ஸ்டாண்டில் பகீர்!

    Editor web3By Editor web3March 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nellai wife murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியை அறிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர்-பேச்சியம்மாள்(26) தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனக்கு எதிராக மனைவி பேசுவதை  ஏற்றுக்கொள்ள முடியாமலும், அதை சமாளிக்கவும் சுதாகர் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில், இன்று காலையில் பாலாமடையில் இருந்து பேருந்து மூலம் சுதாகர் மற்றும் பேச்சியம்மாள் இருவரும் திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது பேருந்தில் இருந்து இறங்கியதும் சுதாகருக்கும், பேச்சியம்மாளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளை வெட்ட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த  பேச்சியம்மாள் கணவரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த நிலையில் பேருந்து நிலையம் உள்ளே துரத்திச் சென்று சுதாகர் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் இரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.

    விடுமுறை தினமான இன்று பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியாக அமைந்தது. உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடிய சுதாகர் அருகிலிருக்கும் திருநெல்வேலி ரயில்வே தண்டவாளத்தில் அரிவாளை வீசி விட்டு நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் மனைவியை கொன்றதாக சரணடைந்தார்.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பேச்சியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுதாகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி பேச்சியம்மாள் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கொலை செய்ததாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசின் ‘தோல்வி மாடல்’!. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!.
    Next Article தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!. என்னென்ன தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    BREAKING| தமிழகத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    March 15, 2026

    அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!

    March 15, 2026

    பாஜகவிற்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்!. திருமாவளவன்!

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    BREAKING| தமிழகத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!

    பாஜகவிற்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்!. திருமாவளவன்!

    அரசியல் நெருக்கடியா?. விஜய்யை 1 மணி நேரம் காக்க வைத்த சிபிஐ!. என்ன நடக்கிறது டெல்லியில்?.

    ஏப்ரல் 1 முதல் FASTag வருடாந்திர பாஸின் விலை உயர்வு!. NHAI அதிரடி அறிவிப்பு!

    Trending Posts

    உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.

    March 15, 2026

    விஜய்க்கு 80 சீட்?. மறுக்கும் இபிஎஸ்!. தீவிரம் காட்டும் டெல்லி பாஜக!. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

    March 15, 2026

    தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!. இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேதி?

    March 15, 2026

    தவெக – பாஜக கூட்டணி?. மும்பை டூ டெல்லி!. நடிகை த்ரிஷா நடத்திய ரகசிய மூவ்? பரபரக்கும் தமிழக அரசியல்!.

    March 15, 2026

    ஏப்ரல் 1 முதல் FASTag வருடாந்திர பாஸின் விலை உயர்வு!. NHAI அதிரடி அறிவிப்பு!

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.