Close Menu
    What's Hot

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசியல் நெருக்கடியா?. விஜய்யை 1 மணி நேரம் காக்க வைத்த சிபிஐ!. என்ன நடக்கிறது டெல்லியில்?.
    தமிழ்நாடு

    அரசியல் நெருக்கடியா?. விஜய்யை 1 மணி நேரம் காக்க வைத்த சிபிஐ!. என்ன நடக்கிறது டெல்லியில்?.

    Editor web3By Editor web3March 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay cbi office
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ  தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தவெக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே ஜனவரி மாதம் இரண்டு முறை விசாரணைக்கு ஆஜரான நிலையில்,  தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் இருப்பதால், இந்த விசாரணையை 15 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும் என்றும் அல்லது காணொலி காட்சி மூலமாகவோ அல்லது சென்னையில் உள்ள அலுவலகத்திலோ விசாரணை நடத்த வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை நிராகரித்த சிபிஐ, டெல்லி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், இன்று காலை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். அதாவது, இன்று காலை 9 மணி அளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு சென்ற விஜய்யிடம், ஒரு மணி நேரத்திற்கும் மேல் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை அமர வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    கையெழுத்து மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு விசாரணை எதுவும் நடக்காமல் அவரை அமர வைத்திருந்ததாகவும் அதன்பின்  அவரிடம் விசாரணையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் 2 மணி நேரத்திற்கு மேல் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில் விஜய்யை காக்க வைத்தது அரசியல் நெருங்கடி காரணமா எனவும் கேள்வி எழுந்து வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏப்ரல் 1 முதல் FASTag வருடாந்திர பாஸின் விலை உயர்வு!. NHAI அதிரடி அறிவிப்பு!
    Next Article பாஜகவிற்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்!. திருமாவளவன்!
    Editor web3
    • Website

    Related Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    July 5, 2026

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.