Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாஜகவிற்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்!. திருமாவளவன்!
    தமிழ்நாடு

    பாஜகவிற்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்!. திருமாவளவன்!

    Editor web3By Editor web3March 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay and Thirumavalavan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டி சென்னை சைதாப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்தான் பதட்டத்தை உருவாக்குவதாக அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியா மட்டுமில்லை உலகநாடுகள் முழுவதும் இந்த பதற்ற நிலை உள்ளது. அண்ணாமலை அறியாமல் பேசுகிறார் என்றுதான் அர்த்தம். நாங்கள் அரசியல் செயயவில்லை. அண்ணாமலைதான் அரசியல் செய்கிறார் .

    திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது . அதிமுக – பாஜக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. 2021 கூட்டணியையே அவர்களால் தக்க வைக்க முடியவில்லை.

    அதிமுக பாஜக , விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்க முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன . விஜய்க்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன நண்பர் விஜய் பாஜகவிற்கு அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். பிற மாநிலங்களில் பாஜக , சங் பரிவார் நய வஞ்சகமாக கூட்டணி கட்சிகளை வளைப்பது , போன்ற யுத்தியை கையாள்வர் , அதை தமிழகத்திலும் செய்ய பார்க்கின்றனர். நண்பர் விஜய் அதற்கு இணங்க மாட்டார் , தனது எதிர்காலத்தை சூனியமாக்கி கொள்ள மாட்டார் என நான் நம்புகிறேன் என்றார்.

    இடதுசாரிகள் கூடுதல் தொகுதிக்கள் கேட்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமா, கூட்டணி பேச்சுவார்த்தையின்போது கூட்டணி கட்சிகள் இடையே மாறுபட்ட , முரண்பட்ட கருத்துகள் வருவது இயல்புதான் . ஆனாலும் இறுதியில் சுமூக தீர்வு காண்போம். இடதுசாரிகளின் கருத்துக்கால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என இரண்டொரு நாளில் தெரிந்து விடும் என்று குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியல் நெருக்கடியா?. விஜய்யை 1 மணி நேரம் காக்க வைத்த சிபிஐ!. என்ன நடக்கிறது டெல்லியில்?.
    Next Article அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.