தமிழகத்தை பொறுத்தவரை, சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு மாதம், 2,000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மோப்ப நாய்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 3,000 முதல் 5,000 ரூபாய் அரசு வழங்கும் நிலையில், குழந்தைகளுக்காக சமைத்த தங்களுக்கு, வெறும் 2,000 ரூபாய் மட்டுமே வழங்குவது சரியா என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியபடி வந்தனர்.

அதுமட்டுமல்ல, ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, திமுகவினர் சட்டசபை தேர்தலின்போது வாக்குறுதி அளித்தனர். திமுக வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளாகியும், வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளனர். இதனை நினைவூட்டவே, சத்துணவு மற்றம் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தபடியே உள்ளனர்.

இந்தநிலையில், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சிறப்பு பென்ஷன் ரூ.2,000லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் ரூ.50,000 லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version