தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, அவருக்குத் தமிழ் திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்யை வைத்து GOAT திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, முதல்வருக்கு ஒரு மறக்கமுடியாத நெகிழ்ச்சியான பரிசை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘GOAT’ திரைப்படத்தில் விஜய் பயணிக்கும் கார் ஒன்றின் முகப்புப் பலகையில் ‘TN 07 CM 2026’ என்ற பதிவு எண் இடம் பெற்றிருக்கும். அப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களால் இந்த நம்பர் பிளேட் பெரிதும் உற்றுநோக்கப்பட்டு, இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், திரையில் காட்டியது போலவே 2026-ல் விஜய் நிஜமாகவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதால், அந்தப் படத்தின் கார் நம்பர் பிளேட்டை அழகிய ‘ஃபிரேம்’ செய்து முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பரிசாக வழங்கியுள்ளார் வெங்கட் பிரபு. மேலும், எதிர்காலத்தில் விஜய் தமிழக முதல்வராவார் என்பதைத் தான் இயக்கிய ‘GOAT’ படத்திலேயே முன்கூட்டியே கணித்திருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த சுவாரசியமான சந்திப்பு மற்றும் பரிசின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version