Close Menu
    What's Hot

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு» மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!. அன்புமணி வரவேற்பு!.
    தமிழ்நாடு

     மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!. அன்புமணி வரவேற்பு!.

    Editor web3By Editor web3February 1, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026&27ஆம் ஆண்டுக்கான  மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் மூலதனச் செலவுகளுக்கான ஒதுக்கீடு சுமார் 10% உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

    2026&27ஆம் ஆண்டுக்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அரிய கனிமவளங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரிய கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கும், ஹைதராபத்திலிருந்து சென்னைக்கும் அதிவேக தொடர்வண்டிப் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும், ஒதிஷா மாநிலம் தால்ச்சர் முதல் தமிழ்நாட்டின் ஆம்பூர் வரை புதிய நீர்வழிப்பாதை அமைக்கப்படும், பழவேற்காடு ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 3 இடங்களில் பறவைகளை பார்வையிடும் மையங்கள் அமைக்கப்படும், முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும், தமிழ்நாட்டில் ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும், பொதிகை மலையில் மலையேற்றச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும், ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடியவை ஆகும். அதேநேரத்தில் அரிய கனிமவழித்தடங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமலும், மக்களில் வாழ்வாதாரமும், வழித்தடங்களும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

    மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் மிகவும் குறிப்பிடத்தக்கது மூலதனச் செலவுகளுக்காக ரூ.12.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தான். கடந்த ஆண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.11.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது முழுமையாக செலவழிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அது 10% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதனால் வேலைவாய்ப்புகளும், பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்பதால் இவையும் வரவேற்கத்தக்கவை.

    சேவைத்துறையின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையில், செமிகண்டக்டர் இயக்கம் 2.0 செயல்படுத்தப் படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, அத்திட்டத்திற்காக ரூ.40,000 கோடியை ஒதுக்கீடு செய்து இருப்பதும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 500 அணைகளை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். தமிழ்நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் கைத்தறித்துறையை மேம்படுத்துவதற்கான மகாத்மா காந்தி கைத்தறித் திட்டமும் வரவேற்கத்தக்கதாகும்.

    வரிகளைப் பொறுத்தவரை புதிய வருமானவரிச் சட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப் பட்டதால் வருமானவரி குறித்து புதிதாக அறிவிக்க எதுவும் இல்லை. ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு விலக்களிக்கக் கூடிய புதிய வருமானவரி சட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான 17 வகை மருந்துகளுக்கும், பிற அரிய நோய்களுக்கான 7 வகையான மருத்துகளுக்கும் அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்பட்டிருப்பதும் பயனளிக்கக் கூடியது.

    மருத்துவத் துறை கட்டமைப்புகளைப் பொறுத்தவரை மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 5 மண்டல மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்; இந்த மையங்களில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள், நோய் பரிசோதனை மையங்கள், மருத்துவச் சிகிச்சைக்கு பிந்தைய சேவை அளிக்கும் நிலையங்கள் ஆகிய வசதிகள் இருக்கும். இவை தவிர 3 இடங்களில் ஆயுர்வேத மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும், பெங்களூரில் இருப்பதைப் போன்ற தேசிய மனநல மருத்துவ அறிவியல் மையம் (நிம்ஹன்ஸ்) வட இந்தியாவில் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளும் இந்தியாவில் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு வகை செய்யும் என்பதில் ஐயமில்லை.

    நாட்டின் வளர்ச்சிக்கு வகை செய்யக்கூடிய இன்னொரு முதன்மைத் துறையான தொடர்வண்டித் துறைக்கான நிதி ஒதுக்கீடும் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026&27ஆம் ஆண்டில் தொடர்வண்டித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.81 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2025&26ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டை விட ரூ.25 ஆயிரம் கோடி, அதாவது 10% அதிகம் ஆகும். கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் அளவான ரூ.1.51 லட்சம் கோடியை விட 7% அதிகமாக ரூ.1.62 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் 16&ஆம் நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் நேரடி வரிவருவாயில் 41% மட்டும் தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல இதை 50% ஆக உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபட்ஜெட் 2026!.‘இந்தியாவின் சீர்திருத்தம் மேலும் வேகமடையும்’!. பிரதமர் மோடி பாராட்டு!
    Next Article பட்ஜெட் 2026!. வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமசர்சனம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    July 5, 2026

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.