வத்தலகுண்டு வனத்துறைகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தத்தை விற்பனை செய்ய முற்படுவதாக, வத்தலகுண்டு வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. வத்தலகுண்டு வனத்துறை வனசரகர் காசிலிங்கம், தாண்டிக்குடி பிரிவு வனவர் முத்துக்குமார், வத்தலகுண்டு வனவர் ரமேஷ் மற்றும் வனத்துறை தனிப்படை பிரிவினர், வியாபாரி போல் பேசி தாண்டிக்குடி அடுத்த மங்களம்கொம்பையைச் சேர்ந்த சுருளிவேல் (38), பண்ணைக்காடு ராதாகிருஷ்ணன் (44) தாண்டிக்குடி பட்லங்காடு பாஸ்கரன் (42) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த யானைத் தந்தத்தை பறிமுதல் செய்தனர். அந்த தந்தத்தை யாரிடமாவது வாங்கினார்களா? அல்லது யானையை கொன்று தந்தத்தை எடுத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுருளிவேல், பாஸ்கரன், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 வரை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.