இனி தமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.
முட்டை விலை எவ்வாறு மாநிலம் முழுவதும் ஒரே அளவில் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதோ அதேபோன்று ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கான விலையை ஒரே அளவில் நிர்ணயம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசின் சார்பில் தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்ட்டல் தயாராகி வருகிறது.
இந்த தனி போர்ட்டலில் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி இறைச்சி விலையை நிர்ணயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடு மற்றும் கோழி உயிருடன் என்ன விலை எனவும் தினசரி அப்டேட்டில் சொல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தினமும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுவது போல ஆடு மாடு கோழிகளின் விலை நிர்ணயம் செய்யும் வகையில் இந்த போர்ட்டல் உருவாகி வருவதாக கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் கூறியுள்ளார்.
