சென்னையில் தக்காளி விலை ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் மழை பெய்து வருவதால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி,
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.60-ஆக விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் ரூ.50க்கும், மூன்றாம் தரம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் ரூ.60-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.70 முதல் ரூ.80 வரையும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.