கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று வழக்கம் போல இன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் இருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அந்த நேரத்தில் அவ்வழியே சிதம்பரம் நோக்கி ரயில் ஒன்று சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் பல மீட்டர் தூரத்திற்கு வேன் இழுத்து செல்லப்பட்டு, வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். உடனே ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பலர் காயமடைந்தனர். மேலும் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தின் போது, ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததும், ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தூங்கியதால், இந்த விபத்து நேர்ந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனையறிந்த பொதுமக்கள் கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
