Close Menu
    What's Hot

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»வெளியானது ’காந்தாரா 2’ ஃபர்ஸ்ட் லுக்… கொண்டாடும் ரசிகர்கள்…
    சினிமா

    வெளியானது ’காந்தாரா 2’ ஃபர்ஸ்ட் லுக்… கொண்டாடும் ரசிகர்கள்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய திரைத்துறையில் தற்போது பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மோலிவுட் எல்லாவற்றையும் தாண்டி, பான் இந்தியா என்ற அளவு வளர்ந்து நிற்கிறது. அனைத்து மொழி படங்களையும், அந்ததந்த மொழிகளுக்கு ஏற்ப டப்பிங் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் வெளியிடப்படுகிறது. அப்படி வெளியாகும் படங்கள் பல வசூலிலும், விமர்சனத்திலும் பெரும் வரவேற்பை பெறுகின்றன.

    அந்த வகையில், கன்னட மொழியில் உருவான காந்தாரா என்ற திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கே.ஜி.எப் படத்தை தொடர்ந்து ஒரு கன்னட படம் இந்தியா முழுவதையும் புரட்டிப் போட்டது என்றால் அது காந்தாரா தான். ரிஷப் ஷெட்டி இயக்கி, அவரே ஹீரோவாக நடித்தும் இருந்தார். ரூ.16 கோடியில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.200கோடி வசூல் செய்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.

    13 2

    நிறைய கண் திருஷ்டி பட்டதாலோ என்னவோ, காந்தார 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல், அடுத்தடுத்து விபத்துகளும், உயிரிழப்புகளும் வந்து கொண்டே இருந்தது. இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞரான கபில் என்பவர், கேராளாவில் சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார். அவரைதொடர்ந்து நகைச்சுவை நடிகர் ராகேஷ் புஜாரி நண்பரின் திருமண நிகழ்வில் நடனமாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேப் போல படப்பிடிப்புக்காக வந்திருந்த திருச்சூரை சேர்ந்த விஜூ.வி.கே என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

    அதேப் போல சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் 30 பேரை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவற்றை எல்லாம் மீறி படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோலாகலமாக நடந்தேறிய திருசெந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு..
    Next Article கடலூர் : பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து… 3 பேர் உயிரிழந்த சோகம்…
    Editor TN Talks

    Related Posts

    ஆக்‌ஷனில் கலெக்‌ஷனை அள்ளிய சமந்தாவின் ’எங்கள் தங்கம்’..!

    June 20, 2026

    மீண்டும் சிக்கலில் நடிகர் அல்லு அர்ஜுன்..!! ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் மரண வழக்கில் நீதிமன்றம் சம்மன்..!!

    June 19, 2026

    தனுஷின் ’ஓம்’!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    கிரிக்கெட்டில் ஹெல்மெட் வந்தது எப்படி?. ஒரு சுவாரசிய பின்னணி!.

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.