சுனாமி நினைவு தினத்தையொட்டி, கடலில் பால் ஊற்றியும், பூக்களை தூவியும் பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுமத்ரா தீவில் 2004 ஆம் ஆண்டு  டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட பூம்பத்தைத் தொடர்ந்து, இந்திய பெருங்கடலில் சுனாமி உருவானது. இந்த ஆழிப் பேரலை தாக்கியதில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராமங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த சோக சம்பவத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, காலையிலேயே கடற்கரையோர பகுதிகளில் திரண்ட மக்களும், மீனவர்களும், சுனாமியில் பறிகொடுத்த தங்களது உறவினர்கள் நினைவாக கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நெல்லை மாவட்டம் தோமையார்புரம் கடற்கரை கிராமத்தில் அதிமுக மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் ஏற்பாட்டில், கிழக்கு ஒன்றிய செயலாளர் KPK.செல்வராஜ் முன்னிலையில் முன்னாள் எம்பியும் மாவட்ட பொருளாளருமான சௌந்தரராஜன் தலைமையில்  கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜெபம் செய்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version