வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் வடக்கு தவெக பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் கூறி வரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக  உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை என்று குற்றம்சாட்டி உள்ள அண்ணாமலை இதுபோன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என கேள்வி எழுப்பி உள்ளார்.  சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக் கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version