கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காகவும் ஆலோசனை நடத்துவதற்காகவும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை வருகை புரிந்தார். காலை நேரு  உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை சார்ந்து ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

துறை சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துறையின் செயலாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆனால், இக்கூட்டத்தில் கோவை மாவட்ட அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் இருவரும் பங்கேற்கவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version