மூவரசம்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நல திட்ட உதவிகள் விழாவில் மின்சாரம் இல்லாமல் வெகு நேரம் காத்திருந்த அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
மின்சாரம் சரிசெய்யப்பட்ட பின்பும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியையும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு
ஜூன் 2 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்றது
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூவரசம்பட்டு ஊராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மாணவ மாணவிகள் வெயிலில் காத்திருந்த பின்னர் காலை 10:30 மணிக்கு அமைச்சர் பள்ளி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது திடீரென பள்ளியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மேடைக்கு வராமல் சுமார் 20 நிமிடம் அமைச்சர் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் அவர் காத்திருந்தார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் வந்த பின்னும் மின்சாரம் வராததால் அவரும் தலைமை ஆசிரியரின் அலுவலகத்திலேயே காத்திருந்தார்.
அப்பொழுது கட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்களை உள்ளே வீடியோ எடுக்காமலும் வராமலும் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் மின்வாரிய அதிகாரிகளிடம் பேசிய நிலையில் மின்சாரம் வழங்கப்பட்டது. பின்னர் இருவரும் விழா மேடைக்கு வந்து சேர்ந்தனர்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பொழுது கொடியேற்று நிகழ்வும் நடைபெற்றது அப்பொழுது அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் ஆட்சியர் ஒன்று சேர்ந்து தேசிய கொடியை ஏற்றிவிட்டு அதனை கவனிக்காமல் கூட வணக்கம் வைத்துவிட்டு சென்றனர்.
தேசியக்கொடியை ஏற்றுவிட்ட பின்னர் தான் கொடி தலைகீழாக ஏற்றி இருப்பது தெரியவந்தது உடனடியாக அங்கிருந்த ஆசிரிய பெருமக்கள் கொடியை மீண்டும் கீழே இறக்கி அதனை சரி செய்து கொண்டிருந்தனர் அதற்கிடையில் கொடி பாட்டும் பாடி முடிக்கப்பட்டது
கொடிக்கம்பத்தில் கொடி இருக்கும் நேரத்தில் பாட வேண்டிய கொடி பாட்டு, ஆசிரியர்கள் கொடியை சரி செய்து கொண்டிருக்கும் பொழுது பாடப்பட்டது. பின்னர் ஒரு வழியாக கொடியை சரிப்படுத்தி பறக்க விட்டனர். அரசு விழாவில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டிருக்கும் பொழுது இவ்வாறு மின்சாரம் இல்லாததும் தேசிய கொடியை தவறுதலாக ஏற்றியததை கூட அறியாத மாவட்ட ஆட்சியரின் செயலும் அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது