Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»விளையாட்டு»ஓய்வை அறிவித்த க்ளென் மேக்ஸ்வெல், ஹென்ரிச் க்ளாசன்…
    விளையாட்டு

    ஓய்வை அறிவித்த க்ளென் மேக்ஸ்வெல், ஹென்ரிச் க்ளாசன்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025Updated:June 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹென்ரிச் க்ளாசனும் அறிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேனும், சுழற்பந்து வீச்சாளரும், மிகச்சிறந்த பீல்டரும் என்றால் அது க்ளென் மேக்ஸ்வெல் தான். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த மேக்ஸ்வெல், இதுவரை 149 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3,990 ரன்கள் எடுத்துள்ளார். 77 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி உள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 126 ஆகும். 2015 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் உலககோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றபோது அதன் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர்.

    சமீபகாலமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேக்ஸ்வெல் முழு ஆட்டத்திலும் பங்கேற்க முடியாமல் திணறி வந்தார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 ஓவர் உலக கோப்பை போட்டியில் முழுமையான கவனம் செலுத்தும் வகையில் 50 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா அணிக்காக 60 ஒருநாள் போட்டியில் விளையாடி, 2,141 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 174 ரன்கள் குவித்துள்ளார். 58 டி20 போட்டிகள் விளையாடிய இவர் 1,000 ரன்கள் எடுத்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கிளாசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 2024-ம் ஆண்டே ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக க்ளாசன் விளையாடி வருகிறார்.

    Australian Cricketer Cricket Retirement Cricket Updates Cricket World Glen Maxwell Heinrich Klaasen IPL News Klaasen Retirement Maxwell Retirement South African Cricketer ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் க்ளென் மேக்ஸ்வெல் ஹென்ரிச் க்ளாசன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமின்சாரம் துண்டிப்பு, தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாவில் குளறுபடி…
    Next Article ஞானசேகரனுக்கு தண்டனை – தவெக வரவேற்பு..
    Editor TN Talks

    Related Posts

    அமைதி ஒப்பந்தம்!. உலகக்கோப்பைக்காக அமெரிக்கா சென்ற ஈரான்!. சவால்களும்.. எதிர்பார்ப்புகளும்!

    June 15, 2026

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    June 15, 2026

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.