Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»மின்சாரம் துண்டிப்பு, தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாவில் குளறுபடி…
    தமிழ்நாடு

    மின்சாரம் துண்டிப்பு, தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாவில் குளறுபடி…

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025Updated:June 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 1610814 thamo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    மூவரசம்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நல திட்ட உதவிகள் விழாவில் மின்சாரம் இல்லாமல் வெகு நேரம் காத்திருந்த அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்

    மின்சாரம் சரிசெய்யப்பட்ட பின்பும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியையும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு

    ஜூன் 2 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்றது

    அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூவரசம்பட்டு ஊராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மாணவ மாணவிகள் வெயிலில் காத்திருந்த பின்னர் காலை 10:30 மணிக்கு அமைச்சர் பள்ளி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது திடீரென பள்ளியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மேடைக்கு வராமல் சுமார் 20 நிமிடம் அமைச்சர் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் அவர் காத்திருந்தார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் வந்த பின்னும் மின்சாரம் வராததால் அவரும் தலைமை ஆசிரியரின் அலுவலகத்திலேயே காத்திருந்தார்.

    Screenshot 2025 06 02 161213

    அப்பொழுது கட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்களை உள்ளே வீடியோ எடுக்காமலும் வராமலும் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் மின்வாரிய அதிகாரிகளிடம் பேசிய நிலையில் மின்சாரம் வழங்கப்பட்டது. பின்னர் இருவரும் விழா மேடைக்கு வந்து சேர்ந்தனர்.

    நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பொழுது கொடியேற்று நிகழ்வும் நடைபெற்றது அப்பொழுது அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் ஆட்சியர் ஒன்று சேர்ந்து தேசிய கொடியை ஏற்றிவிட்டு அதனை கவனிக்காமல் கூட வணக்கம் வைத்துவிட்டு சென்றனர்.

    தேசியக்கொடியை ஏற்றுவிட்ட பின்னர் தான் கொடி தலைகீழாக ஏற்றி இருப்பது தெரியவந்தது உடனடியாக அங்கிருந்த ஆசிரிய பெருமக்கள் கொடியை மீண்டும் கீழே இறக்கி அதனை சரி செய்து கொண்டிருந்தனர் அதற்கிடையில் கொடி பாட்டும் பாடி முடிக்கப்பட்டது

    Screenshot 2025 06 02 162249

    கொடிக்கம்பத்தில் கொடி இருக்கும் நேரத்தில் பாட வேண்டிய கொடி பாட்டு, ஆசிரியர்கள் கொடியை சரி செய்து கொண்டிருக்கும் பொழுது பாடப்பட்டது. பின்னர் ஒரு வழியாக கொடியை சரிப்படுத்தி பறக்க விட்டனர். அரசு விழாவில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டிருக்கும் பொழுது இவ்வாறு மின்சாரம் இல்லாததும் தேசிய கொடியை தவறுதலாக ஏற்றியததை கூட அறியாத மாவட்ட ஆட்சியரின் செயலும் அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது

    Flag Hoisting Error Minister Event Issue National Flag Incident National Flag Upside Down Political Event Controversy Power Cut Event Tamil Nadu Minister Tha Mo Anbarasan Tricolor Mistake அரசியல் நிகழ்வு கொடி குறும்படம் தமிழக அமைச்சர் தலைகீழ் கொடி தா.மோ.அன்பரசன் தேசியக்கொடி மின்தடை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி பாதிப்பு இல்லை..
    Next Article ஓய்வை அறிவித்த க்ளென் மேக்ஸ்வெல், ஹென்ரிச் க்ளாசன்…
    Editor TN Talks

    Related Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.