வைகாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை (மே 29) சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் (Tokens) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவை எளிதாக்கும் வகையில் நாளை (மே 29) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் (Tokens) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வழக்கமான 100 டோக்கன்களுக்குப் பதிலாக, நாளை (மே 29) 150 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் வழக்கமான 200 டோக்கன்களுக்குப் பதிலாக, 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 100 முக்கியமான அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுடன், கூடுதலாக 50 டோக்கன்கள் (மொத்தம் 150) வழங்கப்பட உள்ளன.

மேலும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் (Tatkal) டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்கள் சேர்த்து மொத்தம் 16 தட்கல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சுபமுகூர்த்த நாட்களில் பொதுமக்கள் தங்கள் பத்திரப் பதிவுகளை எந்தவித சிரமமும் இன்றி முடித்திட உதவும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version