நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாகக்குடையானை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53 ). இவர் ஆயக்காரன்புலம் ஊராட்சி செயலாளர் பணியாற்றி வருகிறார். இவரை கருப்பம்புலம் ஊராட்சிக்கு பணிமாற்றம் செய்ததாலும், இரண்டு மாதம் சம்பளம் வழங்காத நிலையில் மனம் உடைந்து வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவரது இறப்பிற்கு ஊராட்சி ஆணையர் தான் காரணம் என கூறி சுப்பிரமணியன் உடலை நாகை – வேதாரண்யம் சாலையில் ஈரவாய்க்கால் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். சுப்பிரமணியனை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சடலத்தை சாலையில் வைத்து மறியல் செய்த இடத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் திருமால் மற்றும் போலீசார் தொடந்து 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வி ஏற்பட்டதால் போலீசார் உடலை எடுத்துச் செல்ல முற்பட்டனர் அப்பொழுது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

பிறகு போலீசார் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.தொடர்ந்து இச்சாலை மறியலால் வேதாரண்யம் நாகை போக்குவரத்து மூன்று மணி நேரம் பாதிக்கபட்டது . இறந்த சுப்பிரமணியனுக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும் ,இரண்டு மகள், ஒரு மகன் உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version