தமிழகத்திலுள்ள 18 முதல் 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் வெற்றி நிச்சயம் என்ற பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சமூக மற்றும் பொருளாதார வகையில் பின்தங்கிய வகுப்பினரான (மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கை தமிழர்கள், மீனவ இளைஞர்கள், சிறுபான்மையினர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு இளைஞர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்) என அனைவருக்கும் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் வழியாக கண்டறிந்து இத்திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஊக்கத்தொகையாக ரூ.12,000 வரை அளிக்கப்படும்.

38 தொழிற்பிரிவுகளில் 165 பயிற்சிகளை 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படவுள்ளது. ZF Rabem TVS Supply chain, MRF, Saint Gobain, Ti Murugappa Groups, Brakes India, Tech Mahindra Foundation, Tata Electornics, Groom India Salon & Spa, LG, Ashok Leyland, Asahi India Glass Limited, Apollo, Amazon Web Services, Tally நிறுவனங்களில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களின் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும்.

விண்வெளி, விவசாயம், ஆடைகள், தானியங்கி, BFSI, மூலதனப் பொருட்கள், கட்டுமானம், மின்னணுவியல், சுகாதாரம், ஐடி, சில்லறை, தொலைத் தொடர்பு, பசுமை வேலைகள், உணவு போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.

ஜெர்மன் உள்ளிட்ட அயல்மொழிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அயல்நாட்டில் வேலைவாய்ப்புக்கான பாதைகள் உருவாக்கித் தரப்படும். வெற்றி நிச்சயம் திட்டத்தில் சேர்வதை எளிதாக்கும் வகையில் Skill Wallet என்ற பிரத்யேக கைபேசி செயலி (Mobile App) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version