விஜய் ஒரு துரோகி” எனவும் செங்கோட்டையன் ஒரு ஊழல்வாதி எனவும் பி.டி.செல்வகுமார் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் மேலாளராக இருந்த பி.டி.செல்வகுமார், ”புலி” திரைப்படத்தின் தயாரிப்பாளர். விஜய் நடித்த போக்கிரி உள்ளிட்ட படங்களுக்கு பி.ஆர்.ஓவாகவும் பணிபுரிந்தார். பின்னர் விஜய்யிடம் இருந்து விலகி கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார் பி.டி.செல்வகுமார். இந்நிலையில் தமது கலப்பை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருடன் பி.டி.செல்வகுமார், கடந்த டிச.11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அன்றுமுதல் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் அவர், “விஜய் ஒரு துரோகி” என வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளார். செங்கோட்டையனையும் ஊழல்வாதி என சாடிய அவர், இளைஞர்கள் விஜயை நம்பி பணம் செலவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். தேர்தலில் தோல்வியடைந்தால் விஜய் வெளிநாட்டுக்கு சென்று விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், விஜய்க்கு தோல்வி பிடிக்காது என கூறினார். தோல்வியடைந்த படத்தின் தயாரிப்பாளர் சந்திக்க வந்தாலும் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார் என்றும் குற்றம்சாட்டினார். “நான் இல்லை என்று சொல்லுங்கள்” எனத் தவிர்த்து விடுவார் எனவும் விமர்சித்தார். வெளியில் அமைதியாக இருப்பது போல தோன்றினாலும், நிஜத்தில் எந்த செயல்பாடும் இருக்காது என்றார்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version