தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமைக் கோரி கடிதம் வழங்கினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் உள்ளிட்ட கட்சிகளோடு தவெக பேச்சுவார்த்தி நடத்தி வருகிறது.

இதற்கிடையே தவெக தலைவர் விஜயை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள், ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக ஆதரவு கடிதத்தை வழங்கினர். காங்கிரஸிடம் ஐந்து இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்துள்ளார். கிண்டியில் உள்ள மக்கள் பவனில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பின் போது ஆட்சியமைக்க அழைக்குமாறு தவெக தலைவர் விஜய் ஆளுநரிடம் கடிதம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உட்பட தவெக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version