பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்காமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு  கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில், சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது; அதே நேரம் அறுதிப் பெரும்பான்மைக்கு தேவைப்படும் 118 எம்எல்ஏ-க்களை அவரது கட்சி பெறவில்லை; நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால்,  ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் தமிழக வெற்றி கழகத்திற்கு 107 இடங்கள் மட்டுமே உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 11 உறுப்பினர்களின் எண்ணிக்கை அவருக்கு தேவைப்படுகிறது; அரசியல் சாசன கொள்கைகளை உறுதி செய்யும் வகையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்காமல், விஜய்க்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆளுனரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version