திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து, தாராபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 19) காலை அமராவதி அணையின் ஆற்றுமதகு வழியாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தாராபுரம் நகராட்சி மக்களின் குடிநீர் பயன்பாடு மற்றும் அப்பகுதி கால்நடைகளின் குடிநீர் தேவையை முன்னிட்டு, அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதாவது, இன்று முதல் வரும் ஜூன் 23-ஆம் தேதி வரை, மொத்தம் நான்கு நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த நான்கு நாட்களில், ஒட்டுமொத்தமாக 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கோடைகால நீர் தேவையைச் சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள இந்த அரசு முடிவை, அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version