தமிழ்நாடு சட்டப் பேரவையில் இடைக்கால வேளாண் பட்ஜெட்டை உழவர் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்ணுயிர் காப்போம் திட்டத்தால் 21 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் மண்ணுயிர் காப்போம் திட்டம் ரூ.178 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

58,000 ஹெக்டேர் தரிசு நிலம் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேழ்வரகு விளைச்சலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும் என்றார்.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் 178 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எண்ணெய் வித்து பயிர்களின் பரப்பை அதிகரிக்க 229 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ரூ.495 கோடியில் 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தளங்கள். ரூ.331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளக்காலங்களில் நெல்மணிகள் வீணாவதை தடுக்க ரூ.495 கோடியில் 130 நவீன சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை பேரிடருக்காக ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.

புதிதாக 2 லட்சம் விவசாயிகளின் நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

5 ஆண்டு காலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

77,000-க்கும் மேற்ப்பட்ட வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்காச்சோளம் சாகுபடி பரப்பு 10 லட்சத்திலிருந்து 12 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

மக்காசோளம் ஊக்குவிப்பு திட்டம் 78 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

496 பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகளை வழங்க 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

சூரிய ஒளியில் இயங்கும் 4,150 பம்பு செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன

மா, பலா, வாழை சாகுபடி பரப்பு அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் 39,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்

கொய்யா உற்பத்தியில் நாட்டிலேயே 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது

5 ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

ஐந்து ஆண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தெரிவித்தார்.

1600 கோடி ரூபாய் மதிப்பின் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

5 ஆண்டுகளில் குளிர் பதனிடும் கிடங்குகளுக்காக 27 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 194 உழவர் சந்தைகள் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளன.

மேலும் 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படவுள்ளன

தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளுக்கு நாள்தோறும் 4 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்

41 விளைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 விளைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு.

கோவையில் நம்மாழ்வார் இயற்கை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்

சென்னை கோவை உள்ளிட்ட நான்கு இடங்களில் உணவு பரிசோதனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன

கிருஷ்ணகிரியில் புதிய வேளாண் கல்லூரி திறக்கப்பட உள்ளது

நுண்ணீர் பாசன திட்டத்தில் சிறு குரு விவசாயிகளுக்கு 100% மானியம். இதர விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படும் என உழவர் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

30,000 விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி மற்றும் தேனி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நெல் சேமிக்கும் திறன் 4 லட்சம் மெட்ரிக் டன்னாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைக்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.  பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது 5 ஆண்டுகளில் அரசு மீன் பண்ணைகள் மூலம் 48 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை, ஊக்கத்தொகை வழங்க ரூ. 730 கோடி

ரூ. 101 கோடியில் அரசு மீன் பண்ணைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

உழவர் நலத்திட்டங்களுக்கு ரூ. 47,248 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என உழவர் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு பண்ணை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

விபத்தில் உயிரிழக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கான மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version