என்னையும், விஜய்யையும் பாஜக பெற்றெடுத்த போது, பிரசவம் பார்த்ததே திருமாவளவன் தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பேசிய திருமாவளவன், திமுக ஒரு தீய சக்தி என்பது விஜய்யின் ஒரே நோக்கம். திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக தான் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். விஜய்யும் சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற நாதக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் பேசிய சீமான், என்னையையும் தம்பி விஜய்யையும் பாஜக பெற்றெடுத்த போது, திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் என்று கூறி நக்கலாக சிரித்தார். தொடர்ந்து, நான் யார் என்பதை என்னிடம் தான் கேட்க வேண்டும்.. தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருந்தார் என்று நினைத்தேன் என்கிறார்.
ஆனால் இத்தனை காலமாக போலி தமிழ்த் தேசியவாதி என்றுதான் என்னை பேசினார்கள். நான் கூட போலி தமிழ்த் தேசியவாதிகள் என்று கூலி திராவிடர்கள் கூவித் திரிகிறார்கள் என்றேன். அவர் ஆர்எஸ்எஸ், பாஜக என்றால், நான் அப்படியா.. அவர்கள் என்னை கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய கைக்கூலி என்றார்கள்.. இவர்கள் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்கிறார்கள்.. ஆனால் பொதுக்குழு நடத்தவே நாங்கள் திரள்நிதி பெற்று நடத்தி வருகிறோம். யாராவது கூலி கொடுத்துவிட்டு பேசுங்கள்.. விடுங்கள்.. அண்ணன் தானே பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
