நாங்கள் யாருடனாவது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் உடனே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்; கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிவிட்டார் டிடிவி என்று செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
கோவை விமான் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ராமதாஸ், தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அண்ணாவை மறந்து விட்டதாக விஜய் கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இரண்டு கட்சிகளும் மறந்து விட்டனர். அம்மாவை மறந்தார்கள். தலைவர்களை மறந்தார்கள். அண்ணாவை மறந்தார்கள் அதான் வெளியே வந்தேன்.
வளர்த்து விட்டவர்களை மறக்ககூடாது. என்னை பொறுத்த வரை தலைவர் தலைவியோடு பயணம் செய்தவன் சிறப்பான முறையில் ஆட்சியில் பங்கு கொண்டவன் என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வார்கள் என்றால் உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் எங்களுடன் வரவேண்டும் என நினைத்தார். இப்போது சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம்.
அதாவது, நாங்கள் யாருடனாவது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் உடனே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் எனவும் டிடிவி தினகரன் கடைசி நேரம் வரை தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சில சூழ்நிலை காரணமாக அவர் தனது முடிவை மாற்றினார். அது பற்றி பொதுவெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்றார்.
