Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாங்குநேரி பயங்கரம்!. இந்தியாவின் டாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?. விஜய் ஆவேசம்!
    தமிழ்நாடு

    நாங்குநேரி பயங்கரம்!. இந்தியாவின் டாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?. விஜய் ஆவேசம்!

    Editor web3By Editor web3March 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay speech salem
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.

    உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி என்று பதிவிட்டுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்!. எடப்பாடி பழனிசாமி பேட்டி!
    Next Article வளைகுடா போர் பதற்றம்!. 5 நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு!
    Editor web3
    • Website

    Related Posts

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    June 10, 2026

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.