ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தின் நீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டு யானையை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டிற்குள் அனுப்பினர்.

அந்தியூர் வனச்சரகம் முத்தரசன்குட்டை மணிகாரத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரது விவசாய நிலத்தில் நீர் சேகரிப்பு தொட்டி ஒன்று உள்ளது. இதில் எதிர்பாராத விதமாகக் காட்டு யானை ஒன்று தவறி உள்ளே விழுந்து தவித்தது.

இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நீர்த் தொட்டியின் ஒரு பக்கச் சுவரை இடித்து, யானை மேலே ஏறி வருவதற்கு வசதியாகப் பாதை அமைக்கப்பட்டது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த யானை எவ்வித காயமும் இன்றி தொட்டியில் இருந்து பத்திரமாக வெளியேறி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த இக்கட்டான சூழலில் விரைந்து செயல்பட்டு, யானையை மீட்ட அந்தியூர் வனச்சரக அலுவலர் எம். நந்தினி, வனவர் ஏ. ஈஸ்வரமூர்த்தி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பீட் வனக்காவலர்கள் அடங்கிய குழுவினரின் இந்த துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version