Close Menu
    What's Hot

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!
    தமிழ்நாடு

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    Editor web3By Editor web3March 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jananayagan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, தணிக்கைச் சான்றிதழ் சிக்கலால் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, நாளை (மார்ச் 17) மறுஆய்வுக்குழுவினர் பார்வையிட உள்ளனர்.

    ஜன நாயகன் திரைப்படம் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சுமார் ரூ.500 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த படம் முதலில் 2026 ஜனவரி 9 அன்று வெளியாக திட்டமிடப்பட்டது.  ஆனால் மத்திய திரைப்பட தனிக்கை அமைப்பின் (CBFC) ஆய்வு குழு பரிந்துரையை ஏற்காததால் படம் வெளியீடு தாமதமானது. இதற்காக தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் உடன் செய்யப்பட்ட OTT ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரியத்தின்  சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பல நாட்களாகத் திரைக்கு வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. படத்தின் சில காட்சிகள் அல்லது வசனங்கள் தொடர்பாகத் தணிக்கை வாரியத்திற்கும் படக்குழுவிற்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், இந்தப் படம் மறுஆய்வுக்குழுவின் (Revise Committee) பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

    முன்னதாக, கடந்த மார்ச் 9-ம் தேதியே மறுஆய்வுக்குழுவினர் இந்தப் படத்தைப் பார்த்து இறுதி முடிவை அறிவிப்பதாக இருந்தது. ஆனால், குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர் ஒருவருக்குத் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அந்தத் தேதி தள்ளிப்போனது. இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

    இந்தச் சூழ்நிலையில்தான், நாளை அதிகாரப்பூர்வமாக மறுஆய்வுக்குழுவினர் ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்க்க உள்ளனர். படத்தின் அரசியல் உள்ளடக்கம் அல்லது சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் பகுதிகள் குறித்து நாளை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, அதன்பின்னர் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய்யின் அரசியல் வருகை மற்றும் சமகால அரசியல் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், தணிக்கை வாரியத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நாளை சான்றிதழ் கிடைத்துவிட்டால், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் எனத் தெரிகிறது.

    இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிமுறைகள் மே 4 வரை அமலில் இருக்கும். இதனால் அரசியல் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்கள் தேர்தல் காலத்தில் வெளியாவதை தேர்தல் ஆணையம் பொதுவாக கட்டுப்படுத்தும் நடைமுறை உள்ளது.

    உதாரணமாக 2019 பொதுத் தேர்தலின் போது விவேக் ஓப்ராய் நடித்த பிரதமர் நரேந்திர மோடி என்ற அவரின் பயோபிக் படம், ராம் கோபால் வர்மாவின் லட்சுமி-யின் என்டிஆர் படம், தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர ராவ்-ன் பயோபிக் படமான Udyama Simham உள்ளிட்ட சில அரசியல் திரைப்படங்கள் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே வெளியிட அனுமதிக்கப்பட்டது.

    அதேபோல், தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது’ஜன நாயகன்’ திரைப்படம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு அதிகம் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் கூறுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் 2026!. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம்!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.  
    Next Article ரசகுல்லா சாப்பிட்டவர் மரணம்!. உணவு சுவாசக்குழாயில் சிக்கிக்கொண்டால் உடனடியாக என்ன செய்வது?.
    Editor web3
    • Website

    Related Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.