திமுக ஆட்சியில் காங்கிரஸுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்பது தொடர்பான மாணிக்கம் தாகூர் கூறிய கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி போராட்ட வடிவமைப்பை செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 11ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம். ஜனவரி 30 ஆம் தேதி அமைதியான உள்ளிருப்பு போராட்டத்தை தியாகிகள் தினமான வார்டு வட்டார பகுதிகளில் நடைபெறும்.

ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி ஆறாம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும். பிப்ரவரி 7 முதல் 15 வரை மாநில காங்கிரஸ் தலைவர் தலைமையில் மாநில அளவிலான பெருந்திரள் மக்கள் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

மேலும், பாஜக அரசை கண்டித்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆதரவாக மகாத்மா காந்தி பெயர் நீடிக்க வேண்டும் சோனியா காந்தி வழிகாட்டுதல் பெயரில் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த புரட்சிகரமான திட்டத்தை எந்த சேதாரமும் சிதைவும் இல்லாமல் நடைமுறைப்படுத்த அகில இந்திய பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

மாணிக்கம் தாகூர் பதிவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் எங்களின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், அவர் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை தெளிவாக உள்ளது.

நாங்கள் எந்த கட்சியிடமும் கூட்டணி பேசவில்லை, திமுகவிடம்தான் பேசி வருகிறோம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தெளிவாக கூறிவிட்டார். இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி, இதை அசைத்து பார்க்க முயற்சிகள் நடக்கிறது, ஆனால் அசைக்க முடியாது.

கருத்து சொல்வதற்கு பேச்சுரிமை எழுத்துருமை, கருத்துரிமை அனைத்து உரிமையும் உள்ளது அதனை எங்கு பேச வேண்டும் என இருக்கிறது. நான் தலைவராக இருந்து கொண்டு எல்லாவற்றையும் ஊடகங்களிடமே பேசினால் அது தலைமை பண்பா ? எல்லாவற்றையும் ஊடகங்களிடம் பேசிவிட்டால் பின்னர் எதற்கு கூட்டணி கட்சிகள் ?

எங்களுக்கு எது தேவையோ அதனை கூட்டணி கட்சி தலைவரிடம் நாகரீகமாக கேட்டு பெறுவோம். அகில இந்திய தலைமை சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது அதன் அடிப்படையில் பேசி வருகிறோம். எங்களுக்கு தொகுதி வேண்டும் என்றால் முக்கிய கட்சியான திமுகவிடம்தான் கூற வேண்டும்.

ஊடகங்களா கூடுதல் தொகுதிகளை பெற்றுத்தரப்போகிறது, அதிகாரத்தை பெற்றுத்தர போகிறது. ஊடகம் முன்பு எதற்காக பேச வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது. இறுதி ஒப்பந்தம் என்பதை ஊடகத்திடம் நாங்கள் வெளிப்படுத்த போகிறோம். இதைத்தான் தமிமுன் அன்சாரி கவலைப்பட்டு சொல்லிவிட்டு சென்றார்.

காங்கிரஸ் தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். தலைமை என்ன சொல்கிறதோ கட்டுப்பட்டு கூட்டணி கட்சி வெற்றிக்காக செயல்படுவபவர்கள். அரைவேக்காடு, தாந்தோன்றிதனமாக செயல்படுபவர்கள் காங்கிரஸ் தொண்டர்கள் அல்ல .தேசிய தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவர்கள். பேச்சுரிமை இருக்கிறது அவரவர்கள் பேசுகிறார்கள், நான் அப்படி பேச முடியுமா ? கூட்டணி பேச்சுவார்த்தைக்கு செல்லும் போது பேசுவேன்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பது வேறு. அதே நேரத்தில் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், எவ்வித அசம்பாதவிதமும் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஊழல் குற்றாட்டு புகார் வழங்கியது தொடர்பான கேள்விக்கு  பதிலளித்த செல்வபெருந்தகை, ஊழல் குறித்த புகாரை ஆளுநரை சந்தித்து யார் கொடுப்பது என இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துரை அமைச்சராக இருந்த போது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கூறிய போது உச்சநீதிமன்றம் எதற்கு தடையாணை கேட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி மீது ஆயிரம் குற்றச்சட்டு இருக்கும் போது மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தலாமா ? முதலமைச்சர் மீது எனக்கு ஒரே வருத்தம்தான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? அனைவரிடத்திலும் தாயுள்ளத்தோடு நடந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவினர் மீதி தாயுள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்று பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version