Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    தமிழ்நாடு

    ”தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2025Updated:July 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், மெட்ராஸ் மாகாணம் அதிகாரப்பூர்வமாகத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டதை நினைவுகூரும் ஒரு முக்கிய தினமாகும்.

    பெயர் மாற்றத்தின் பின்னணி:

    1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, இந்தியாவின் பிற மாநிலங்கள் இந்த நாளைத் தங்கள் மாநில நாளாகக் கொண்டாடின. தமிழ்நாட்டிலும் 2019-ம் ஆண்டு வரை நவம்பர் 1-ம் தேதியே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

    ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, மெட்ராஸ் மாகாணம் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டு, 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, 2021-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 18-ம் தேதியையே தமிழ்நாடு நாளாக அறிவித்தார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி:

    இன்றைய தமிழ்நாடு நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது X பக்கத்தில், “தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்! ஜூலை 18, 1967 தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரபூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.

    #தமிழ்நாடு_நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்!

    ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.

    தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த… pic.twitter.com/ja5fC8zRQ0

    — M.K.Stalin (@mkstalin) July 18, 2025

    அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி ‘தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு’ என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடு நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Arignar Anna History July 18 M.k. stalin Madras Province name change Tamil Nadu Day அறிஞர் அண்ணா தமிழ்நாடு நாள் பெயர் மாற்றம் மு. க. ஸ்டாலின் மெட்ராஸ் மாகாணம் வரலாறு ஜூலை 18
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை: ரூ.1.5லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது…
    Next Article எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ”தலைவன் தலைவி”… 2 மொழிகளில் நித்யா மேனன் டப்பிங்…
    Editor TN Talks

    Related Posts

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.