அமெரிக்காவின் யுஜின் நகரில் நாளை முதல் (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 9 வரை உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 36 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ இந்திய தடகள அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாபெரும் பெருமையாக, இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் தமிழகத்தை மட்டும் சேர்ந்த 10 இளம் வீரர், வீராங்கனைகள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். தேசிய அணியில் தமிழகத்தின் பங்களிப்பு சுமார் 30 சதவீதமாக இருப்பது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

யூவின் ஆனந்த், ஜித்தின், நீல்ஸ் சாம்ராஜ், ரஞ்சித்குமார், நகுல் பிரபு, தரணிதரன், அம்ரிஷ், ரோய்ஷன், பவானா, தியா ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் ஆவர். 

தேசிய அளவில் முத்திரை பதித்த இந்த இளம் திறமையாளர்கள், சர்வதேச தடகள மேடையில் தங்களின் திறமையை நிரூபிக்கவும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற உயர்மட்ட உலகளாவிய போட்டிகளுக்காக தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ளவும் இந்தத் தொடர் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version